Skip to main content

Posts

அயோத்தி ஸ்ரீராம் லல்லா தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அயோத்தி தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடியேனின் ஆசாரியரான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் இந்தக் குரோதி வருடத்தில் நல்லதே நடக்கும்; எல்லாவிதமான மனோரதங்கள் நிறைவேறும்… என்று அருளாசி வழங்கிய அதே வாரம் அயோத்தியா சென்று வந்தேன்.  வந்தவுடன், உற்றார் உறவினர்கள் எல்லோரும் அணிநகர் அயோத்தியில் குழந்தை ஸ்ரீராமர் சௌக்கியமா என்று கேட்கவில்லை,  ‘எப்படி சேவித்தீர்கள் ? திருப்பதி போலக் கூட்டமா ? தள்ளிவிடுகிறார்களா ?’  என்று வினவினார்கள்.  அதற்குக் காரணம் எல்லோருடைய மனோரதமும் அயோத்தி சென்று ஸ்ரீராம் லல்லாவை தரிசிக்க வேண்டும் என்பது தான். நம்  புண்ணிய பூமியான பாரதத் தேசத்தில் நம் வாழ்நாளில் அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அவருக்கு ஒரு கோயில் என்பது 500 வருட இந்தியர்களின் மனோரதம். சென்ற சோபக்ருத் ஆண்டு தை மாதம் 8 ஆம் நாள் (ஜனவரி 22ஆம் ) அன்று ப்ராணப் பிரதிஷ்டை (ஸம்ப்ரோக்ஷணம்) இனிதே நடைபெற்றது.  ஆண்டாளின் ‘மனத்துக்கு இனியான்’ வீற்றிருக்கும் கோயில், பாரத மக்களின் மனங்களைப் பூட்டிய ’மனோ’ரதமாக  ப்ராணப் பிரதிஷ்டை அன்று காட்சி அளித்தது. அதன் பின் குழந்தை ஸ்ரீராமரின் ஆச்சரியமான அர்ச்சாவதாரத் த

உங்கள் ஓட்டு யாருக்கு ?

உங்கள் ஓட்டு யாருக்கு ? தமிழகத்தில் நாற்பது தொகுதிக்குத் தேர்தல் என்பதை மறந்து, கோவையில் அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரின் தேர்தலாகி கோவை இன்று பேசும் பொருளாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர் அங்கே போட்டியிட்டால் கூட இந்த மாதிரி ஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. மக்கள் மீது நம்பிக்கை வைத்து பணம் கொடுக்க மாட்டேன் என்று தைரியமாக அடித்துச் சொல்லுகிறார் அண்ணாமலை. அவருடைய அந்த நம்பிக்கையைக் கோவை மக்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். கோவை மக்கள் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரதிநிதியாகவிட்டார்கள். நாளைய தமிழகம் நன்றாக விடிய இந்தியாவோ கோவையை எதிர்நோக்கியுள்ளார்கள். கோவையில் பாஜக என்ன நிகழ்த்துகிறதோ அதே தான் தமிழகம் முழுக்க 2026ல் புரட்சியாக வெடிக்கப் போகிறது. அந்த மாற்றத்தின் அலை கோவையிலிருந்து உருவாகக் காத்துக்கொண்டு இருக்கிறது. கோவை மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைக் கேட்டு ஓட்டுப் போட்டாலே போதும் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடுவார். சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் ஒரு ”ஆட்டோ ஓட்டுநரிடம் உங்கள் ஓட்டு யாருக்கு?” என்

வழிகாட்டும் ஸ்ரீராமர்

வழிகாட்டும் ஸ்ரீராமர் காட்டிக்கொடுத்த காட்டுமன்னார் என்ற பதிவைப் படித்திருப்பீர்கள். அதற்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோதண்ட ராமர் தான்! ஸ்ரீராம நவமி அன்று இதை மீண்டும் சொல்லுவதில் மகிழ்ச்சி. ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதல் பிரதியை உடையவர் திருநட்சத்திரம் அன்று அதை வெளியிடுவதற்கு முன் உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கம் தாயார், நம்பெருமாள் ஆசீர்வாதங்களைப் பெற்றுவிடலாம் என்று காரில் புறப்பட்டேன். உறையூரில் அர்ச்சகரிடம் “நாச்சியார் திருவடியில் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்ற போது அவர் ஆசையுடன் புத்தகங்களை நாச்சியார் திருவடியில் வைத்து தாயாரின் புஷ்பம், மஞ்சள் காப்பு பிரசாதங்களைப் புத்தகம் மீது அள்ளிக் கொடுத்தார். பிறகு அவதார ஸ்தலத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ திருப்பாணாழ்வார் சந்நிதி மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர் மற்றும் நாச்சியார் வீற்றிருக்கும் மண்டபத்தில் புத்தகங்களை வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்த போது கோவிட் காலத்தில் வெளியே வரவே பயப்பட்டுக் கொண்டு இருந்த காலத்திலும் வெய்யிலில் பூக்களை விற்றுக்கொண்டு இருந்த பெண்மணியிடம் புத்தகங்களைக் கொடுத்து

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்  பதம் பிரித்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதல் பதிப்பு முதல் பிரதியை காட்டுமன்னார் கோயில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் வைத்து ஆசீர்வாதம் பெறச் சென்றிந்த போது ஓர் அனுபவம் ஏற்பட்டது. சுருக்கமாகச் சொல்லுகிறேன். கோவிட் இரண்டாம் அலை எங்கும் பரவியிருந்த  அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தையும் பூரிப்பையும் கொடுத்தது. காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார்.  அங்கே இருந்த ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி (தீர்த்தம் ஸ்தானிகர் )  “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகி

பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள்

 பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள் (1)  எங்கள் வீட்டில் ஏற்கனவே நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம் இருக்கிறதே ? இது பதம் பிரித்த பிரபந்தம்.  பதம் பிரித்த பிரபந்தமா ?  சுமாராகத் தமிழ் படிக்கத் தெரிந்தால் பயப்படாமல் படிக்கலாம். முயன்றால் பொருள் எளிதில் விளங்க ஆரம்பிக்கும். உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றைப் பதம் பிரித்து/பிரிக்காமல் கொடுத்திருக்கிறேன். வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.  சரி இதனால் என்ன பயன் ?  சுஜாதா கல்கியில் எழுதியதைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். (கீழே கொடுத்திருக்கிறேன்) ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள். இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்டமேகங்களே. தலைகால் புரியவில்

ஒரு ஸ்பூன் போதுமே!

 ஒரு ஸ்பூன் போதுமே!  நான் ப்ளஸ்-2 படிக்கும் போது ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ புதிதாக அறிமுகமானது. முதல் பாடமே ROM, RAM என்று படித்து சொளையா மார்க் வாங்கியது நினைவு இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு குட்டி மாட்டுப் பொம்மையின் வாலை தட்டிவிட்டால்  “Old MacDonald had a farm - eieio! ” என்று அலறும். இந்தப் பொம்மையில் உள்ளே இருப்பது ROM சமாசாரம் என்பது அதன் வாலை ஆட்டிவிடும் போது எனக்குத் தெரியாது.  RAM - Random Access Memory ; ROM - Read-Only Memory சுருக்கம். இரண்டும் மைக்ரோசிப் மெமரி சமாசாரம். RAM  தற்காலிக நினைவகம்.  ROM நிரந்தர நினைவகம். இதை உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயலலாம்.  நீங்கள் படித்த பள்ளி வகுப்பு கரும்பலகையில் உங்கள் ஆசிரியர் என்றோ சாக்பீஸில் எழுதியதை இன்று படிக்க முடியாது. ஆனால் என்றோ ராஜராஜ சோழன் எழுதிய கல்வெட்டை இன்றும் படித்து ஆராய்ந்துகொண்டு இருக்கிறோம். உங்கள் வகுப்பாசிரியர் எழுதியது RAM. சோழன் எழுதியது ROM.  மாட்டுப் பொம்மையின் உள்ளே சின்ன சிலிக்கான் சில்லில் நிரந்திர நினைவகத்தில் அந்தப் பாடல் சேமிக்கப்பட்டு  எப்போது வாலைத் தட்டிவிட்டாலும் அதிலிருந்து அது அந்தப் பாடல் ஒலிக்கிற

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்...

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்... செல்வி ஜெயலலிதா இருந்த வரைக்கும் எப்போதும் அதிமுக கூட்டணிக்குத்  தான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். 1996’ல் ரஜினி குரல் கொடுத்த போது ஜெ செய்த செயல்களால் சற்று முகம்சுளித்தாலும் அப்போதும் கூட அம்மாவிற்குத் தான் ஓட்டுப் போட்டேன். தமிழகத்தில் நாத்திகம், தேச விரோத,  ஹிந்து துவேஷம், குறிப்பாகப் பிராமணத் துவேஷம் செய்யும் கட்சிகளுக்கு நான் எப்போதும் நான் ஓட்டுப் போட்டதில்லை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன் என்றால் நான் ஒரு சங்கி!  ஜெ என்னை வசீகரித்த தலைவர். ஒரு பெண் என்றும் பாராமல் பத்திரிக்கைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை ஆபாசமாகத் தூற்றி பத்திரிக்கை அட்டைப் படத்தில் கேவலமாகச் சித்தரித்த போது அவர்களை ஒரு பெண் சிங்கமாக எதிர்கொண்டார். தமிழர் வீரம், ஜல்லிக் கட்டு என்று வீரம் பேசுபவர்கள் கூட, தங்களால் ஒருவரை வீழ்த்த முடியவில்லை என்றால் உடனே அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் வேலோ கத்தியோ இல்லை. பிராமணர்கள் என்றால் அவர்களுடைய பூணூலும் குடுமியையும்,  மற்றவர்கள் என்றால் ஜாதி, இனம் அல்லது இருக்கவே இருக்கிறார்கள் குடும்பப்

ரோஜாவுடன் பார்த்தசாரதி

ரோஜாவுடன் பார்த்தசாரதி பல வருடங்களுக்கு முன் புகுந்த வீட்டுக்குள் காலடி வைக்கும் புதுமணப்பெண் போல் முகநூலில் நுழைந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பன்னீர் ரோஜாவுடன் பிரமாதமாகக் காட்சி அளித்தார். யாரோ ஓர் அன்பர் அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார். படத்தை ஆராய்ந்ததில் ஓரத்தில் ’Vishnumayam’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. படத்தை யார் எடுத்தார் என்று விசாரித்தேன். யார் என்று தெரியவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ’Vishnumayam’ முகநூல் பதிவரிடம் “உங்கள் படங்கள் அருமை” என்று மெசேஜ் அனுப்பினேன். பதிலுக்கு “மிக்க நன்றி. உங்கள் எழுத்தை நான் விரும்பிப் படிப்பேன் என்றார்” பிறகு அவர் பகிரும் படங்களை ரசித்து “படங்கள் அருமை” என்று இரண்டு வார்த்தைப் பாராட்டுவேன். ஒரு நாள் இருவரும் தொலைப்பேசியில் பேசினோம். அப்போது அவரிடம் அந்த ரோஜா பார்த்தசாரதி படங்களைக் குறித்துச் சொன்னேன். அதைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்து அறையில் மாட்டிக்கொள்ள ஆசை என்றேன். சந்தோஷமாகக் கேட்டுக்கொண்டார். பிறகு பல வருடங்கள் அவ்வப்போது அவர் படங்களை ’லைக்’ செய்து அவருடைய தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டேன். சென்ற வருட

ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி

  ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதனும் இந்தப் புத்தகப் பொக்கிஷமும் சேர்ந்து இன்று கிடைத்தது. ஸ்ரீமத் ஆசாரியன் என்றால் அது நம் வேதாந்த தேசிகனே. சப்தசதி குழம்ப வேண்டாம் - எழு நூறு (சப்த ஸ்வரங்கள் ; சதம் அடித்தார்) சமூக ஊடக சத்ருக்கள் நிறைந்த இந்த அவசர உலகில் நமக்கு இது போன்ற புத்தகங்களைப் படிக்க நேரமும், கவனமும் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவை இரண்டு தலைமுறைக்கு முன்பே ‘extinct’ ரகங்களில் சேர்ந்துவிட்டது. ஸ்வாமி தேசிகனின் வாழ்கை வரலாற்றைச் சுமார் 700+ ஸ்லோகங்களில் ‘ஆர்யா சந்தஸ்.’ என்று சமஸ்கிருதக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சந்தஸ் எழுதப்பட்டது. தமிழில் வெண்பா போன்று மன்னார்குடி ஸ்ரீ உவே.கோபாலசாரியார் 118 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளார். இந்த 700 ஸ்லோகங்களுக்கும் எளிய ஆங்கிலத்தில் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே வே.கண்ணன் ஸ்வாமியும், முனைவர் உ.வே. ஆர். திருநாராயணன் அவர்களும் எழுதியுள்ளார்கள். முதல் ஸ்லோகத்தைப் படித்தேன். I worship Sri-Rama, (i) who is of black-complexion like a fresh water- bearing cloud, (ii

விஜய் அரசியல் பிரவேசம்

விஜய் அரசியல் பிரவேசம் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற குங்குமப் பொட்டு வைத்த மூன்று பக்க அறிக்கையில் பலர் ‘க்’ ‘ப்’ ‘த்’ என்று மெய்யெழுத்து ஆணியைப் பிடுங்கிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துச் சொல்லி சில விஷயங்களைப் பார்க்கலாம். குமுதத்தில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற ரீதியில் வந்த சினிமா விமர்சனம் நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து விஜய் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகம். சமீபத்தில் நல்ல பாரு நான் தான் கழுகு என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார். பருந்து காக்கை ஆகாது என்ற பழமொழியை மாற்றினார். பல காலம் hibernation இருந்துவிட்டு, படம் வெளியாகும் தறுவாயில் கலக்‌ஷன் அரசியல் பேசாமல், விஜய் களத்தில் செய்துகொண்டு இருந்த செயல்களில் 100% அரசியல் இருந்தது. அவர் அரசியலில் காலடி வைக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆனால் தன் மார்க்கெட் உயரத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் இனி முழு நேர அரசியல் என்று வந்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. சரியான முடிவோ இல்லையே ஆனால் நிச்சயம் துணிச்சலான முடிவு. கறுப்பு, கருப்பு எது சரியான சொல் என்ற

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள்

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள் இன்று ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநட்சத்திரம். ஆழ்வானைப் பற்றி சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். கூரத்தாழ்வானே நம் முன்மாதிரி ஸ்ரீ வைஷ்ணவத்தில் யாரை ’ரோல் மாடலாக’ கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூரத்தாழ்வான் என்று பதில் சொல்லலாம். பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'பலசுருதி' (பலன்) சொல்லும் பாசுரம் இது ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் மாயன் மணிவண்ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே. இந்தப் பாசுரங்களைச் சொன்னால் மாயனான மணிவண்ணன் திருவடிகளை வணங்க வல்லப் பிள்ளையை மகனாகப் பெறுவார்கள் என்கிறார். இந்த மாதிரி ஒரு மகனைத் தான் பெற்றார் ஆழ்வானுடைய தந்தையார். ஏன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். ஆழ்வானின் சிறுவயதில் அவருடைய தாயார் பரமபதம் அடைந்தாள். ஆழ்வானைப் பார்த்துக்கொள்ள அவருடைய தந்தை மறுமணம் செய்து கொள்ள எண்ணினார். ஏறக்குறைய அது நடக்கும் சமயம், ஆழ்வானைப் பார்த்தார் அவருடைய தந்தை. எல்லா ஸ்ரீ