Desikan

  • Back to Main page

Saturday, 03.01.09

திருப்பாவை

நான்கு வருடங்களுக்கு முன்பு மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் திருப்பாவைக்கு (தமிழிலும், ஆங்கிலத்திலும் ) ஒரு படத்துடன் எளிய விளக்கமும் தந்தது நினைவிருக்கலாம். 2007 வருடம் திருப்பாவையில் வரும் உவமைகள் சில வற்றை எழுதினேன். 7 பாடல்களுடன் நின்றுவிட்டது,

இந்த வாரம் இரண்டு பாடலுக்காவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.

திருப்பாவை பதிவுகளை முன்பு பார்க்காதவர்கள், வலது பக்கம் உள்ள கிருஷ்ணர் படத்தை கிளிக் செய்து படிக்கலாம். 

Desikan - pencil 13:44:31 - பொது - pencil Permalink -Comment: 1 [yesterday, 09:46]

Friday, 02.01.09

சாக்லெட் கடவுள் வந்திருந்தார்

சுஜாதா மறைவிற்குப் பிறகு முதன்முறையாக டிசம்பர் இறுதியில் சென்னை சென்றிருந்தேன்.

சென்னை பனகல் பார்க், கோடம்பாக்கத்தில் ஸ்கூல் சறுக்கு மரம் போல் மேம்பாலங்கள் முளைத்திருக்கின்றன. போத்தீஸ் பக்கம் பத்து நிமிடம் நின்று பார்த்தபோது, 2 பஸ், 5 ஆட்டோ சில பைக்குகள் போயின. மேம்பாலத்துக்குக் கீழே வழக்கம்போல் அதே கூட்டம்.

இரண்டு நாடகங்களுக்குப் போக முடிந்தது. கிரேஸி மோகனின்,-"சாக்லேட் கிருஷ்ணா", பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் (பூர்ணம் குருகுலம்)  பூர்ணம், சுஜாதா நினைவாக - "கடவுள் வந்திருந்தார்."

[read more]

Desikan - pencil 19:14:56 - தேசிகன் - pencil Permalink -Comments: 7 [yesterday, 02:22]

Tuesday, 29.07.08

பெண்களூர்-0 9

"சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடிப்பட்டிருக்கிற‌தாம்"

"என்ன ஆயிற்று?"

"என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்"

[read more]

Desikan - pencil 11:30:07 - தேசிகன் - pencil Permalink -Comments: 15 [04.08.08 20:53]

Wednesday, 09.07.08

எலக்டரானிக்ஸ் கனவுகள்

null

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்த புத்தர் எப்படி இருப்பாரோ அதுபோல் பாதியளவு புத்தர்சிலை திருச்சியில் எங்கள் வீட்டு எதிர்ப்புறம் உள்ள அருங்காட்சியக வாசலில் மழையிலும் வெயிலிலும் கூட சிரித்துக்கொண்டு அமைதியாக இருக்கும். காவிரி ஆற்று மணலில் கண்டெடுத்தது என்று தினத்தந்தி பேப்பரில் நான்காம் பக்கம் படத்துடன் செய்தி வந்தது நினைவிருக்கிறது. புத்தர் வந்த அதே சமயம் 'நானோ எலக்ட்ரானிக்ஸ்' என்ற சின்ன கடையும் எதிர்ப்புறத்தில் 'ரேடியோ, '2-In-One, டிவி ( Solidare, Dynora, JVC, Sony, Panasonic ) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள் சிறந்த முறையில் ரிப்பேர் செய்து தரப்படும்' என்ற போர்டுடன் வந்தது.

[read more]

Desikan - pencil 09:35:17 - தேசிகன் - pencil Permalink -Comments: 43 [01.09.08 18:49]

Friday, 18.04.08

நட்சத்திர எழுத்தாளர் (1935 - 2008) - குவளைக் கண்ணன்

1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது. ஸ்ரீதரின் அம்மாவிடம் படிக்கப் புத்தகம் கேட்டபோது, டாக்டரிடம் கேட்கச் சொல்லிவிட்டார். நான் அதுவரை டாக்டரிடம் பேசியதில்லை.

[read more]

Desikan - pencil 18:24:16 - சுஜாதா - pencil Permalink -Comments: 4 [29.06.08 09:56]

Older articles:

18.04.2008

28.03.2008

25.03.2008

24.03.2008

21.03.2008

20.03.2008

18.03.2008

16.03.2008

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தேன்கூடு.காம்
Back to Main page