Desikan

  • Back to Main page

Thursday, 26.02.09

லிப்டுக்கு இரண்டு கதவு

"White Noise 2 - The Light" என்ற ஆங்கிலப் படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தேன். முதல் காட்சியில், இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு  'சி.சி.யூ'வில் இருதயத் துடிப்பு நின்று போகும். உடனே மருத்துவர்கள் நெஞ்சை அழுத்தி, பிசைந்து இருதயத் துடிப்பை மீட்டுகொண்டு வருவார்கள்.

[read more]

Desikan - pencil 11:15:14 - சுஜாதா - pencil Permalink -Comments: 19 [01.03.09 15:14]

Friday, 18.04.08

நட்சத்திர எழுத்தாளர் (1935 - 2008) - குவளைக் கண்ணன்

1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது. ஸ்ரீதரின் அம்மாவிடம் படிக்கப் புத்தகம் கேட்டபோது, டாக்டரிடம் கேட்கச் சொல்லிவிட்டார். நான் அதுவரை டாக்டரிடம் பேசியதில்லை.

[read more]

Desikan - pencil 18:24:16 - சுஜாதா - pencil Permalink -Comments: 4 [29.06.08 09:56]

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் குமுதம் தீராநதி(இரண்டாம் பகுதி)

பகுதி-2 - வ.ஜ.ச. ஜெயபாலன், எம்.ஜி.சுரேஷ், இரா.நடராஜன், த.பழமலய்

[read more]

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் - குமுதம் தீராநதி(பகுதி ஒன்று)

குமுதம் தீராநதி இதழில் வந்த சுஜாதா அஞ்சலி கட்டுரைகள்
பகுதி 1 - பா.வண்ணன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி.

[read more]

Desikan - pencil 18:10:00 - சுஜாதா - pencil Permalink -Comment: 1 [18.04.08 15:33]

ஊஞ்சலை தேடினோம்

pornam sujathaஎழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

 

[read more]

Desikan - pencil 12:35:13 - சுஜாதா - pencil Permalink -Comments: 2 [18.04.08 15:19]

Older articles:

28.03.2008

25.03.2008

24.03.2008

18.03.2008

16.03.2008

14.03.2008

13.03.2008

12.03.2008

10.03.2008

08.03.2008

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தேன்கூடு.காம்
Back to Main page