ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர் ( தமிழில் சுஜாதா தேசிகன்) ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார். ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார். ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு...