Skip to main content

Posts

பிச்சை - S, M, L, XL

பிச்சை - S, M, L, XL  ஸ்மால்  பொதுவாக நாம் காரில் செல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே பிச்சை கேட்பவர்கள் கையை உள்ளே நீட்ட அனுமதிப்பதில்லை. கண்ணாடியைக் கண் சிமிட்டுவது போல இறக்கி இரங்கிப் பிச்சைப் போடுவோம். காசுக்காக அவர்கள் நம் காரை துடைப்பதைக் கூட அருவருப்பு காரணமாக நிராகரிக்கிறோம். .  அதே போல் கோயிலில் பல பிச்சைக் காரர்கள் இருக்கும் போது ஒருவருக்குப் போட்டால் மொத்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்துகொண்டு பிச்சைக் கேட்பார்கள். அதைப் பல முறை நாம் தவிர்க்கவே விரும்புவோம்.  மீடியம்  சமீபத்திய  ஒரு YTபர் வீடியோ பண்டிகை பரிசாகத் துணிமணிகளை இலவசமாகக் கொடுக்க கூட்டம் எனக்கு உனக்கு என்று கையை வாகனத்துக்குள் நீட்டி வாங்குகிறார்கள். பொறுமையாக வாங்குங்கள், கையை உள்ளே நீட்டாதீர்கள் என்று அவர் சொல்ல இலவசத்தை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்ற முனைப்பில் கூட்டம் முண்டியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் 'அசிங்கமா பண்ணாதீங்க' ' கைய நீட்டாதீங்க’ என அவர் தன் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.   லார்ஜ் இலவச நோட்டீஸ் கொடுத்தாலே கையை நீட்டும் தமிழக மக்கள், ஒவ்வொரு தேர்தல் ...

சில விஷயங்கள்

சில விஷயங்கள்  ராஜாஜி நான் பிறப்பதற்கு முன் எழுதிய தலையங்கங்களை அவ்வப்பொது படிப்பது உண்டு. அப்படிப் படிக்கும்(உண்மைகள் உறங்குவதில்லை) போது அந்தப் புத்தகத்தின் முன்னுரையை (வானதி ராமநாதன்) மீண்டும் ஒருமுறை படித்தேன்.  ”என்னுடைய சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்ற இரண்டு நூல்களையும் 'இராமாயணம்', 'மகாபாரதம்' என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் என்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிடுகிறார்கள்.' - சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி' என்று 26-8-72 தேதியிட்டு ஓர் அறிவிப்பைக் 'கல்கி' வார இதழ் வெளியிட்டது. அப்போது என் தந்தையாருக்கு ராஜாஜி அவர்கள் ஆசீர்வாதம் செய்து இரண்டு பழங்களையும் எடுத்துத் தந்தார். "நான் கவர்னர் ஜெனரலா இருந்தது வெறும் ரெகார்டுலதான் இருக்கும். ஆனா இந்த மகாபாரதமும் இராமாயணமும் எழுதினேன் பாரு, அது இரண்டுமே இரண்டு கனிகள். கற்பகக் கனிகள். அதை இல்லை என்று சொல்லாமல் எப்பவும் மக்களுக்குக் கிடைக்கும்படியா மலிவான விலையிலே புத்தகமாப் போட்டுத் தந்து கொண்டே இருக்கணும். அதை நீ கட்டாயம் செய்வாய். அதற்கு அச்சாரம்தான் இந்தக் கனி" என்று அப்போது தி...

மழையில் அனுமான் சாலீசா

 மழையில் அனுமான் சாலீசா  சிறுவயதில் காலெண்டர் பின்புறம் வெள்ளையாக இருந்தால் உடனே அதில் ஏதாவது வரைய ஆரம்பித்துவிடுவேன். ஏதோ ஒரு மாசக் கடைசியில் காலெண்டர் ஷீட் கிடைக்க அதில் ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அனுமார் படம் வரைய ஆரம்பித்தேன். ஏ.பி.டி அனுமாரின் விஷேசம் பச்சை கலர். பச்சை தசைகள், பச்சை விரல்கள், பச்சை வால்… ஏன் அனுமாருக்கு உடம்பு முழுவதும் இருக்கும் ரோமங்கள் கூட பச்சைதான். இடுப்பில் இருக்கும் சிறிய பட்டுத் துண்டு மட்டுமே பிங்க் கலர். அந்தப் பச்சை என்னை ஈர்த்தது!  அவர் சஞ்சீவி மலையைத் தூக்குவதைவிட உடம்பு முழுவதும் பச்சையாக வரைவது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. வரைந்தேன்.  “அனுமார் மாதிரி இருக்கு பெருமாள் சந்நிதியில் வெச்சுடு,” என்று பாட்டி அங்கீகரித்தாள் அனுமார் படத்துக்கு பார்டர் எல்லாம் போட்டுக் கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் சந்நிதியில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலை கோத்துச் சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணெய்யை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆ...

மெட்ராஸ் விஜயம்

மெட்ராஸ் விஜயம்  இரண்டு நாள் சென்னை விஜயம். எல்லா இடங்களிலும் 40₹ குறைந்து காபி இல்லை. கீதம் ஹோட்டலில் 38ரூ ( மினி காபி). காபி நன்றாக இருக்கிறது. கொடுத்தவுடன் சூடாக்க கைக்கு அடக்கமாக ஓர் அடுப்பு எடுத்துக்கொண்டு செல்வது உத்தமம். ஊர் முழுக்க காபி மாமா, மெட்ராஸ் காபி கடைகள் முளைத்திருக்கிறது. அதே போல் ஊர் முழுக்க ‘சாய்’ கடைகள்.  பல நாள் ஆசையான ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் சூரியன் வருவதற்கு முன் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். கீழே பார்த்த போது மூடி இருந்த திருப்பதி தேவஸ்தானம் தாயார் சன்னதியும் அருகில் திறந்திருந்த  'Tea Nagar Coffee' கடையும் கண்ணில் பட்டது. நடேசன் பூங்காவில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு இருந்த எழுத்தாளர் இரா. முருகனை பார்த்து ஒரு ஹலோ சொன்னேன். குத்து மதிப்பாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். ராமேஸ்வரம் சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்பவர்களைப் பார்க்கும் போது சர்க்கஸ் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் முதல்வர் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டும். ரங்கன் தெரு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒரு குப்பை தொட்டிக்கு பதில் இரண்டு வந்திருக்...

நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு

 நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு  இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அன்று தான் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம். குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் ஊரில் மாசி மாதம் புனர்பூசம்  நட்சத்திரத்தில் அவதரித்தார். இது உங்களுக்குத் தெரிந்த தகவல் தான்.  தாய்மொழியான மலையாளம், தமிழ், வடமொழி என்று மும்மொழிக் கொள்கையை அன்றே கடைப்பிடித்தவர் இந்த ஆழ்வார்.  அதே கேரளத் தேசத்தைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி அவர்கள் அருளியது தான் நாராயணீயம். சுமார் 18,000 ஸ்லோகங்கள் கொண்ட பாகவதத்தின் சாரமாக,  சுமார் 1000 உயர்ந்த வடமொழி ஸ்லோகங்களாகத் தந்துள்ளார்.  அதை நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தமிழ்ப் பாடல் வடிவில் வடித்திருக்கிறார். ஞாயிறு மாலை இந்தியா கெலித்து விடுமா என்ற கெலியிலும் பலர் நாரத கான சபாவில் அதன் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்தார்கள்.   வீடியோ காமராவில் பின்னந்தலை தெரியாமல் குனிந்துகொண்டு சென்ற போது, அடியேனை ஸ்ரீநிவாசன் வரவேற்று முன் வரிசையில் அமர வைத்...

விகடன் கேலிச்சித்திரம் - கொந்தளிக்கத் தேவை இல்லை.

விகடன் கேலிச்சித்திரம் - கொந்தளிக்கத் தேவை இல்லை.  விகடன் கார்டூனுக்கு கொந்தளிக்கத் தேவை இல்லை. ஆபாசமாக பல அட்டைப்படங்கள் போட்ட போது  ( பிறகு குட்டியாக மன்னிப்பு கேட்டார்கள்)  கொந்தளிக்காதவர்கள் இதற்கு ஏன் கொந்தளித்தார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இருந்தாலும் ஏன் கொந்தளித்தார்கள் என்று யோசிக்கிறேன்.  முதன் முதலில் வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் கலாச்சார அதிர்ச்சியை (cultural shock ) அனுபவிப்பார்கள். எனக்கும் அந்த உணர்ச்சி ரீதியான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் வேறு பல அதிர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கிறது. நான் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். தில்லும் முல்லு படத்தில் தே.சீனிவாசன் ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் இளைஞன் சட்டையில் பூனை படம் இருக்க, “இது என்ன?” என்று கேட்பார். “பூனை” என்று பதில் சொல்ல,  ”அதில் என்ன பெருமை? ” என்பார்.  அது போலத் தான் என் வெளிநாட்டுப் பயணங்களும். அதில் எந்தப் பெருமையும் இல்லை, ஆனால் பல அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.   ஒரு முறை ஃபிரான்ஸ் செல்லும் போது ஃபிளைட்டில் எவ்வளவு கேட்டும் கடைசி வரை...

கழுதை வழி

கழுதை வழி பத்து நாளைக்கு முன் ‘இந்தியர்கள் விலங்கிட்டு’ இந்திய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதைக் கண்டு பலரும் ராகுல் காந்தி போலக் கொத்துப் போனார்கள். சட்டவிரோதமாகச் சென்றதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தப்பு தான், ஆனால் அவர்களை நடத்தியவிதம்? தோழர்கள் மனிதம் செத்துவிட்டது என்றார்கள்.  இந்தியாவிற்குத் திரும்பி அனுப்பினார்கள் என்று எழுதினார்கள். யாரும் தாய்நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்று எழுதவில்லை. டிரம்ப் இவர்களைக் குற்றவாளிகள், வேற்றுக்கிரகவாசிகள் என்று மீண்டும் மீண்டும் திட்டிக்கொண்டு இருந்த போது அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே பலர் டிரம்ப் வரக் கூடாது என்று வேண்டிக்கொண்டார்கள்.  பிரதமர் மோடியின் ஸ்வச்ச பாரத் - தூய்மை இந்தியா திட்டத்துக்கு நாமும் ஏதாவது செய்வோம் என்று முன்பு நான் வசித்த தாம்பரம் வீட்டுக்கு முன் இருந்த குப்பை எல்லாம் அகற்றி இங்கே குப்பை போடாதீர்கள் என்று போர்ட் வைத்து சின்ன செடி ( நாளை மரமாக வளரும் என்று நம்பி ) வைத்தேன். சில நாளில் திடீர் என்று மரம் உசந்து வளர்ந்துவிட்டதோ என்று பார்த்தால் நான் வைத்த செடிக்குப் பக்கம் ஒரு பாஜக ...

பெரிய நம்பியின் திருவாக்கு

  பெரிய நம்பியின் திருவாக்கு ஆசாரியன் திருவாக்கிற்கு என்றும் ஓர் ஏற்றம் உண்டு. 1000 வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்க்கையே மாற்றிவிடும். ஏன் என்றால் அந்த வார்த்தை சத்தியம். இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள். மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. ’தந்தை பெரியார்’ மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார். 1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துகொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்). உபன்யாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். “தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலைப் பல ஸ்ரீ வைஷ்ணவர்களை முகம் சுளிக்கச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் “இது தகுமோ?” என்று கேட்க அதற்கு நம்பிகள் “பறவையான ஜடாயுவுக்கு ராமர் இற...

ஆண்டாளின் அமுதம் - 5

  ஆண்டாளின் அமுதம் - 5 மாயனை மன்னு வட மதுரை மைந்தனை* தூய பெருநீர் யமுனைத் துறைவனை* ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கை* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை** தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது* வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க* போய பிழையும் புகுதருவான் நின்றனவும்* தீயினில் தூசாகும்; செப்பு ஏலோர் எம்பாவாய் இப் பாசுரத்தின் தொடக்க வார்த்தையும் கடைசி வார்த்தையும் தான் இந்தப் பாசுரத்தின் சாராம்சம். ”மாயனை செப்பு” முதல் வார்த்தையான ‘மாயன்’ என்பதில் முழுக் கிருஷ்ணாவதாரமும் ( மற்ற அவதாரங்களும் ) அடங்கிவிடும். இந்தப் பாசுரத்தை மெதுவாக ஒவ்வொரு வார்த்தையாகப் படித்துக்கொண்டு வந்தால் முதல் நான்கு வரிகளில் கிருஷ்ணாவதாரம் மொத்தமும் நம் கண்முன்னே வந்து செல்லும். கம்சனின் உபத்திரவம் தாங்க முடியாது அவனிடம் முறையிட்ட போது மாயனாக தேவகி வயிற்றில் சங்கு சக்கரங்களுடன் பிறந்து மாய வித்தை காண்பித்தான். அவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி சாமானியக் குழந்தையாகக் காட்சி அளித்து மாயம் புரிந்தான். தூய பெருநீர் யமுனை வழிவிட யசோதைக்கு மாயச் செய்யும் குழந்தையானான். அங்கேயும் கம்சனின் தொல்லைகள் தொடர அ...

ஆண்டாளின் அமுதம் - 4

  ஆண்டாளின் அமுதம் - 4 ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்* ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்து ஏறி* ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து* பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்** ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து* தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்* வாழ உலகினில் பெய்திடாய்!* நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் இந்தப் பாசுரத்தில் வருணதேவனை ஆண்டாள் கூப்பிடுகிறாளா ? வணங்குகிறாளா ? அது ஆழி மழை ‘கண்ணா’வா? அண்ணாவா என்று பலவாறு அர்த்தம் கொடுத்து வந்திருக்கிறார்கள். பொதுவாக ஸ்ரீ வைஷ்ணவர்களிடம் “ஏன் மற்ற தேவதைகளை நீங்கள் வணங்குவதில்லை ?” என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது.”எனக்கு எல்லாத் தெய்வங்களும் ஒன்று தான்” என்று சிலர் சொல்லுவதையும் கேட்கிறோம். சிலப்பதிகாரத்தில் கோவலனை பிரிந்த வருத்தத்தில் இருக்கும் கண்ணகியிடம், தேவந்தி என்ற அவள் தோழி “நிறைய நாளாகக் காத்துக்கொண்டு இருக்கிறாயே!” என்று அவள் ஓர் உபாயம் சொல்லுகிறாள். “ஊரில் சோம குண்டம்-சூரிய குண்டம் என்ற குளத்தில் நீராடிவிட்டு, அங்கே இருக்கும் ஒரு மன்மதக் கோயிலில் வணங்கினால் பிரிந்தவர்கள் சேர்...

ஆண்டாளின் அமுதம் - 3

  ஆண்டாளின் அமுதம் - 3 ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி* நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்* தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகள** பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்* தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக்* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்* நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் சென்ற பாசுரத்தில் ஐயமும், பிச்சை என்று வந்ததால் உடனே ஆண்டாளுக்கு நமக்காகக் கையேந்தி பிச்சை கேட்ட வாமன அவதாரம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். உடனே ஓங்கி உலகளந்த உத்தமனைப் பாடுகிறாள். உத்தமனைப் பாடி என்று சொல்லாமல் உத்தமன் ‘பேர்’ பாடி என்று எதற்குச் சொல்லுகிறாள். பெருமாளைக் காட்டிலும் அவனுடைய திருநாமத்துக்கு ஏற்றம் அதிகம் என்பதைச் சுட்டிக் காட்ட, பெரியவாச்சான் பிள்ளை ’அவன்’ கட்டிப்பொன் போலே, ‘திருநாமம்’ பணிப்பொன் போலே என்கிறார். கட்டிப்பொன் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது, அதுவே பணிப்பொன் போல என்றால் அழகிய நகைகளாக அணிந்துகொள்ளலாம். முதல் பாசுரத்தில் ’வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது’ என்று கூறியிருந்தேன...

ஆண்டாளின் அமுதம் - 2

  ஆண்டாளின் அமுதம் - 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு* செய்யும் கிரிசைகள் கேளீரோ!* பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி,* நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி** மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்* செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்* ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கை காட்டி* உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் இன்று ஐயம், பிச்சை என்ற இந்த இரண்டு வார்த்தைகளைப் பற்றி சில விஷயங்களைக் கூறுகிறேன். கேட்காதவர்களுக்குக் கொடுப்பது ஐயம், அதாவது கேட்காவிட்டாலும் குறிப்பு அறிந்து கொடுத்தல். பிச்சை என்பது யாசகம் கேட்பவர்களுக்குக் கொடுப்பது என்பதை முன்குறிப்பாக கொடுக்கிறேன். சென்ற வாரம் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கையில் குழந்தையுடன் ஒரு பெண் என்னிடம் பிச்சைக் கேட்டாள். ”சில்லறை இல்லை” என்றேன். அவள் விடாமல் என்னைச் சுற்றி வந்து கேட்க, கோபமாக அவளைத் தவிர்த்தேன். விரட்டி விட்டேன் என்று கூறச் சொல்லலாம். வீட்டுக்கு வந்த பிறகு அதைப் பற்றி யோசித்தேன். பக்கத்தில் இருக்கும் கடையில் சில்லறை வாங்கி தந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அந்தப் பெண் கேட்...

ஆண்டாளின் அமுதம் - 1

  ஆண்டாளின் அமுதம் - 1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்** ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்* நாராயணனே நமக்கே பறை தருவான்!* பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் ஆண்டாளின் சரித்திரத்தை இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம். பாடிக்கொடுத்தாள், சூடிக்கொடுத்தாள். ஆனால் அவளின் திருப்பாவைக்கு உரைகள் எண்ணிலடங்காதவை. ஆண்டாள் சங்கத் தமிழில் மட்டுமே பாடிக்கொடுத்தாள் என்று நினைக்கிறோம். அவள் வடமொழியிலும் நமக்கு அருளியிருக்கிறாள். ஆச்சரியப்பட வேண்டாம். அது தான் ஸ்ரீமத் ராமாயணம். இது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். எப்படி என்று சொல்லுகிறேன். கோதா ஸ்துதியில் ஸ்வாமி தேசிகன் ‘பொறுமையில் இவளே பூமிப்பிராட்டி!’ என்று ஆண்டாளைப் பூமித்தாயின் அவதாரம் என்கிறார். கோதையான பூமித்தாயின் காதான வான்மீகத்திலிருந்து தோன்றியது தான் ஸ்ரீமத் ராமாயணம். காதிலிருந்து தோன்றியதற்கே இந்த ஏற்றம் என்றால் அவளின் திருவாய்...